பகுதி : 8
கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கை
மனித வாழ்வு சிறப்பாக அமையக் கடவுளே சில சட்ட திட்டங்களை நமக்கு வகுத்துத் தந்துள்ளார்: நம் இதயத்தில் பதித்து வைத்துள்ளார். இவற்றைப் பத்துக் கட்டளைகள் என அழைக்கிறோம். இந்தக் கட்டளைகளை இயேசுவே கடைப்பிடித்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். மேலும்இ கிறிஸ்துவின் போதனைகளைச் செம்மையாகக் கடைப்பிடிப்பதற்குத் திரு அவையும் சில வழி முறைகளைக் கொடுத்துள்ளது. இவற்றைத் திரு அவையின் ஒழுங்கு முறைகள் என்கிறோம். தூய ஆவியாரின் துணை கொண்டு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதே அன்றாடக் கிறிஸ்தவ வாழ்க்கை ஆகும்.90. உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவது எவ்வாறு?
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய கிறிஸ்தவ நற்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாக நாம் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துகிறோம்.
91. நம்பிக்கை என்றால் என்ன?
தம்மை நமக்கு வெளிப்படுத்தும் கடவுளின் திட்டத்தை ஏற்று, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே நம்பிக்கை ஆகும்.
92. எதிர்நோக்கு என்றால் என்ன?
கடவுளுக்கு நாம் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், அவர் நம்மைக் கைவிடாமல் பாதுகாத்துஇ வழிநடத்தி நிலைவாழ்வில் சேர்ப்பார் என்னும் மனவாதிய எதிர்நோக்கு ஆகும்.
93. அன்பு என்றால் என்ன?
அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்யவம். தம்மைப் போல் மற்றவர்களை அன்புசெய்யவும் கடவுள் நமக்கு அளிக்கும் அருளாற்றலே அன்பு ஆகும்.
94. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்த அவர் நமக்குத் தந்துள்ள கட்டளைகள் யாவை?
பத்துக் கட்டளைகள்.
1 நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய்
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபசாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.
இந்த பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்.
1. எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்வது.
2. தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது.
95. திரு அவையின் ஒழுங்குமுறைகள் யாவை?
1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும்.
இந்நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க வேண்டும்.
3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்றுஇ நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
4. திரு அவை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.
5. குறைந்த வயதிலும்இ திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.
6. திரு அவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.
96. கடவுளுடைய கட்டளைகளையும் திரு அவையின் ஒழுங்குமுறைகளையும் நாம் மீறினால் என்ன நேரும்?
கடவுளோடும் திரு அவையோடும் சமுதாயத்தோடும் நாம் கொண்டுள்ள நல்லுறவு பாதிக்கப்படும். இதையே பாவம் என்கிறோம்.
97. எத்தனை வகைப் பாவங்கள் உள்ளன?
பிறப்புநிலைப் பாவம், செயல்வழிப் பாவம் என இரண்டு வகைப் பாவங்கள் உள்ளன.
98. பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன?
முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால் உண்டாகி. நம்மோடு பிறக்கிற பாவம்.
99. செயல்வழிப் பாவம் என்றால் என்ன?
நன்மை தீமை அறிந்த நிலையில், ஒருவர் முழு மனத்துடன் செய்யும் பாவம்.
100. செயல் வழிப் பாவம் செயல் வழிப் பாவம் எத்தனை வகைப்படும்?
சாவான பாவம், அற்பபாவம் என இரண்டு வகைப்படும்.
101. சாவான பாவம் என்றால் என்ன?
கடவுளுடைய கட்டளையை முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கைச் செய்து, அவரது அன்பை முறித்துக் கொள்வது சாவான பாவம்.
102. அற்ப பாவம் என்றால் என்ன?
முழுமையான அறிவோ விருப்பமோ இன்றி, கடவுளுடைய அன்புக்கு எதிராகச் செயல்படுவது அற்பபாவம். இப்பாவத்தைத் தொடர்ந்து செய்யும்போது, அது சாவான பாவத்திற்கு வழி வகுக்கிறது.
103. தலையான பாவங்கள் எத்தனை?
ஏழு.
104. அவை யாவை?
1. தற்பெருமை
2. சீற்றம் |
3. காமவெறி
4. பேராசை
5. பெருந்தீனி விரும்பல்
6. பொறாமை
7. சோம்பல்
105. தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகள் யாவை?
1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. தாராள குணம்
5. அளவோடு உண்ணல்
6. பிறரன்பு
7. சுறுசுறுப்பு
106. அருள் வாழ்வு சார்ந்த மூன்று நற்பண்புகள் யாவை?
1. நம்பிக்கை
2. எதிர்நோக்கு
3. அன்பு
107. புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையா?
முறையே. ஏனெனில் புனிதர்கள் கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டுள்ளார்கள் ; நமக்காகக் கடவுளிடம் பரிந்துரைக்கிறார்கள்.
108. புனிதர் வணக்கம் சிலை வழிபாடு ஆகுமா?
ஆகாது. கடவுளுக்கு மட்டுமே நாம் வழிபாடு செய்கிறோம். புனிதர்களுக்கு நாம் செலுத்துவது வணக்கம் மட்டுமே.
109. நாம் கடவுளோடு கொண்டுள்ள நட்புறவை வளர்க்கத் துணைபுரிபவை யாவை?
1. இறைவேண்டல்
2. இறைவார்த்தை
110. இறைவேண்டல் என்றால் என்ன?
கடவுளோடு அன்புடன் உரையாடுவதே இறைவேண்டல். அதாவதுஇ பிள்ளைகள் தங்கள் தந்தையிடம் நம்பிக்கையுடன் பேசுவது போல் கடவுளுடன் நாம் பேசுவது இறைவேண்டல் ஆகும்.
111. இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் என்ன?
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். சீமையிலிருந்துளங்களை விடுவித்தருளும். ஆமென்.
112. நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வது எப்படி?
கிறிஸ்துவை நம் முன்மாதிரியாகக் கொண்டு, அவரிடம் விளங்கிய அன்பு. உண்மை, நீதி முதலிய பண்புகளைக் கடைப்பிடித்து, அவருடைய பணிகளை ஆற்றுவதன் வழியாக நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ முடியும்.
113. கிறிஸ்தவப் பெற்றோரின் கடமை என்ன?
1. கணவனும் மனைவியும் ஒருவர் ஒருவரிடம் தன்னலம் அற்ற அன்பும், நேர்மையான பற்றும் கொண்டிருக்க வேண்டும்.
2. தங்கள் பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவ வாழ்வில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
3. தங்கள் பிள்ளைகளை நன்னடத்தையிலும் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் வளர்க்க வேண்டும்.
114. பிள்ளைகளின் கடமை என்ன?
பிள்ளைகள் இயேசுவைப் பின்பற்றி, தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, அன்பில் வளர வேண்டும்.
115. கிறிஸ்தவக் குடும்பங்களின் சாட்சிய வாழ்வு எப்படி இருக்க வேண்டும்?
1 பெற்றோரும் பிள்ளைகளும் இறைவார்த்தை வழியில் வாழ வேண்டும்.
2. அருளடையாள வாழ்வில் அக்கறையும் நம்பிக்கையும் கொண்டு வாழ வேண்டும்.
3. திரு அவையின் வளர்ச்சிக்காகவும் சமூக நலனுக்காகவும் தன்னலம் இன்றி உழைக்க வேண்டும்.
116. கிறிஸ்தவ வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவோர் யாவர்?
கடவுளின் தாயும் என்றும் கன்னியுமான புனித மரியாவும் மற்றப் புனிதர்களும் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக