சனி, 25 ஜூலை, 2020

செபம்: மூவேளை மன்றாட்டு





செபம்: மூவேளை மன்றாட்டு
முன்: ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத்தூது உரைத்தார்இ
எல்: மரியா தூய ஆவியால் கருவுற்றார். - அருள் நிறைந்த
முன்: இதோ ஆண்டவரின் அடிமை.
எல்: உமது சொற்படியே எனக்கு நிகழட்டும். - அருள் நிறைந்த
முன்: வாக்கு மனிதரானார்.
எல்: நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறைந்த....
முன்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
எல்: இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மன்றாடுவோமாக!
இறைவா! உம் திருமகன் மனிதர் ஆனதை உம்முடைய வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...