சனி, 25 ஜூலை, 2020

கிறிஸ்துவின் ஆன்மாவே (செபம், பாடல்)







கிறிஸ்துவின் ஆன்மாவே (செபம்)

கிறிஸ்துவின் ஆன்மாவே, என்னைப் புனிதப்படுத்தியருளும்.
கிறிஸ்துவின் திரு உடலே, என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, எனக்கு எழுச்சியூட்டியருளும்.
கிறிஸ்துவின் விலாவிலிருந்து வழிந்தோடிய தண்ணிரே, என்னைக் கழுவியருளும்.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னைத் தேற்றியருளும்,
ஓ! நல்ல இயேசுவே, எனக்குச் செவிசாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரியவிடாதேயும்.
தீய பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்,
எனது இறப்பின் வேளையில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
உம் புனிதர்களோடு எக்காலமும் உம்மைப் புகழச் செய்தருளும்.
- ஆமென்.

கிறிஸ்துவின் ஆன்மாவே (பாடல்)

கிறிஸ்துவின் ஆன்மாவே, என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே, என்னை மீட்டருளும்.!
கிறிஸ்துவின் திரு இரத்தமே, எனக்கு எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணிரே, என்ளைக் கழுவிடுமே.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னைத் தேற்றிடுமே.
ஓ! நல்ல இயேசுவே, எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரியவிடாதேயும்.
தீய பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
இறப்பின் வேளையில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களோடு எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும். - ஆமென். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...