"நல்லதை உள்ளத்திலும் தீயதை வெளியிலும் எரிவோம்..."
இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வலை உவமை மூலமாக நமக்கு வாழ்க்கை பாடத்தை கற்பிக்கிறார்.
கடலில் வீசப்பட்ட வலையானது பலவிதமான மீன்களை வாரி வருகிறது. அவற்றில் நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை வெளியே எறிவார்கள் என்று இயேசு கூறக்கூடிய வார்த்தைகளை நமது வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
கடலில் வீசப்பட்ட வலையில் நல்ல மீன்களும், கெட்ட மீன்களும் இருப்பது போல ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் நன்மையும், தீமையும் இருக்கின்றது. ஒரு தீச்செயலை செய்யும் போது நமது மனமானது அது தவறு என்பதை சுட்டிக்காட்டும்.
ஆனால் பல நேரங்களில் மனித மனங்கள் தவறு எனத் தெரிந்தும், அற்ப சுகங்களுக்காக தீயதை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு, அதை தங்கள் செயலில் வெளிப்படுத்துகின்றனர். இன்றைய நாளில் தீயதை விலக்கி விட்டு நல்லதை எடுத்துக்கொண்டு வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவர் இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாக "நல்லதை நமக்குள் வைத்துக்கொண்டு, தீயதை தூக்கி எறிந்துவிட்டு" ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை மண்ணுலகில் உருவாக்கிட முயல்வோம்....
"நல்லதை உள்ளத்திலும் தீயதை வெளியிலும் எரிவோம்..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக