"நாமும் ஆண்டவரை கண்டிட..."
இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் வழியாக என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..
"நான் ஆண்டவரைக் கண்டேன் " என்ற மகதலா மரியாவின் வார்த்தைகளை மையமாக வைத்து ஆண்டவரை நாமும் கண்டு கொள்ள உங்களை அன்போடு அழைக்கின்றேன் ...
சில வருடங்களுக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாடக்கூடிய நாளில் N. பூலாம்பட்டி என்ற பங்கிலே இயேசுவின் உயிர்ப்பை தத்துரூபமாக குழந்தைகள் நடித்துக் காட்டினர். அதில் மகதல மரியாவாக நடித்த ஒரு பெண்மணி "நான் ஆண்டவரே கண்டேன்" எனக் கூறிக்கொண்டு மக்களை நோக்கி வந்து தன் மகிழ்வுக்கு பகிர்ந்து கொள்வது போல அந்த நிகழ்ச்சியானது வடிவமைக்கப்பட்டிருந்தது. அது அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
மகதலா மரியாவை நினைவு கூறக் கூடிய இ ன்றைய நாளில் இந்த ஒரு நிகழ்வை நாமும் பல இடங்களில் தத்ரூபமாக நடித்துக் காட்ட கூடியவர்களை பார்த்திருப்போம். பல நேரங்களில் பலரிடம் இந்த நிகழ்வு பற்றி நாமே பேசியிருக்கலாம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான் ...
ஆண்டவரை கண்ட மகதலா மரியா அதை சீடர்களோடு சென்று அறிவித்து பகிர்ந்துகொண்டார். நாம் வாழக்கூடிய இந்த உலகில் எத்தனை நபர்கள் ஆண்டவரை கண்டுள்ளனர்? எத்தனை நபர்கள் கண்ட ஆண்டவரைப் பற்றி அடுத்தவரிடம் எடுத்துரைத்துள்ளனர்? என சிந்தித்துப் பார்க்க நான் அழைக்கப்படுகிறோம் ...
ஆண்டவரை காண்பது என்பது என்ன? என சிந்திக்கும்போது
இரு கை கூப்பி வணங்குவதை விட, ஒரு கை நீட்டி உதவி செய். உன்னை இரு கை கூப்பி வணங்குவார்கள். நீயும் கடவுள் ஆகலாம். என்ற வரிகளே கண்முன் ந்துச் செல்கின்றன.
இன்றைய சமூகத்தில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த உலகில், தன் தேவைகளுக்காக உழைக்கக்கூடிய கூட்டத்தினருக்கும் மத்தியில் அடுத்தவரின் தேவையை மனதில் வைத்து அதை நினைவுகூர்ந்து சரியான நேரத்தில் அவர்களுக்கு உதவக் கூடியவர்களை இந்நேரத்தில் நாம் கடவுளாக நினைவுகூர அழைக்கப்படுகிறோம் ...
இப்படி செயல்படுபவர்கள் இருக்கிறார்களா? என சிந்திக்கின்ற உங்களுக்கு ஒரு உதாரணத்தையும் தர விரும்புகிறேன். திருச்சி புனித மரியன்னை பேராலயத்தின் வீதியில் சில கவனிப்பாரற்ற ஏழைகள் இருக்கிறார்கள். அந்த ஏழைகளுக்கு அனு தினமும் காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் பல நபர்கள் வந்து உணவு வழங்கி செல்கிறார்கள். உணவு வழங்கி செல்பவர்களுக்கெல்லாம் இது ஒரு கட்டாயம் அல்ல, இருந்தபோதும் அந்தப் பணியை தங்கள் பலவிதமான பணிகளுக்கு மத்தியில் ஒன்றாக எண்ணி அனுதினமும் இதை செய்து வருகிறார்கள்.
தேவையில் இருப்பவரின் தேவைகளை உணர்ந்தவர்களாக நாம் செயல்படும்போது, தேவையை நிவர்த்தி செய்பவர்கள் கடவுளாக தென்படுகிறார்கள். இந்த கடவுளாக நாம் அனைவரும் வாழ அழைக்கப்படுகிறோம். இந்த கடவுள்களை நாம் நமது வாழ்வில் சந்திக்கும் போது புனித மகதலா மரியாவை போல "நானும் ஆண்டவரை கண்டேன்" எனக் கூறி அடுத்தவரிடத்தில் எடுத்துரைக்கவும், அவர்களைப் போல நாமும் ஆண்டவராக கண்டுகொள்ளப்படவும், நமது செயல்பாடுகளை சரிசெய்துகொண்டு வாழ... இன்றைய நாளில் இந்த நற்செய்தி வாசகத்தில் வழியாக உங்களை அழைக்கின்றேன் ...
யாரைத் தேடுகிறாய்? என்ற இயேசுவின் கேள்விக்குப் பின் இயேசுவை கண்டு கொண்ட மகதல மரியாவை போல இதுவரை நாம் எப்படிப்பட்ட மனிதர்களை இச்சமூகத்தில் தேடிக்கொண்டிருந்தோம் என சிந்தித்து, நம் சிந்தனைகளை சீர்படுத்தி, நாம் கடவுளை கண்டு கொள்ளவும், நம் தேவையில் இருப்பவர்கள் நமக்கு கடவுளாக தெரிவது போல பலருக்கு நாமும் கடவுளாக தெரிந்திட.... கடவுள் போல உதவிய நபர்களை "நானும் ஆண்டவரை கண்டேன்" என்று அனைவருக்கும் மகிழ்ச்சியோடு, அனுதினமும் அறிவித்து வாழ்ந்திட இன்றைய நாளில் இயேசுவின் பின் அணி செல்வோம்....
"நாமும் ஆண்டவரை கண்டிட..."
ஆண்டவரை காண்பதற்கான அழைப்பு மிகச்சிறப்பான அழைப்பு. நாமும் ஆண்டவரை கண்டு கொள்வோம்!
பதிலளிநீக்கு