சனி, 25 ஜூலை, 2020

பகுதி - 2. மீட்புக்குத் தயாரிப்பு




பகுதி - 2. 
மீட்புக்குத் தயாரிப்பு
நாம் இவ்வுலகப் படைப்பிலே அழகையும் ஒழுங்கையும் காண்கிறோம். அவற்றைக் கண்டு பெரிதும் வியப்பு அடைகிறோம். ஆனால் இந்த அழகான உலகில் பாவமும் தீமையும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். இவற்றின் காரணத்தை அறிய ஆவல் கொள்கிறோம்.

7. அனைத்தையும் படைத்தவர் யார்? 
கடவுள்.

8. கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை? 
உடல் இல்லாத வானதூதரும், உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதரும் ஆவர்.

9. வானதூதர் என்பவர் யார்? 
கடவுளை ஏற்று, அவருக்குப் பணி செய்து, அவரது பெரு மகிழ்வில் பங்கு பெறுபவர்களே வானதூதர் ஆவர்.

10. அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன? 
கடவுளை ஏற்க மறுத்து நரகத்திற்குச் சென்றவர்களே அலகை ஆவர்.

11. கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்? 
கடவுள் தம்முடைய அன்பையும் ஞானத்தையும் மயையும் வெளிப்படுத்த உலகைப் படைத்தார். மனிதருக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.

12. கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்? 
கடவுள் மனிதரைத்தம் உருவிலும் சாயலிலும் படைத்தார்.

13. கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்? 
தம்மை அறிந்து, அன்பு செய்து, தமக்குப் பணி புரிந்து, தம்முடைய பெரு மகிழ்வில் பங்கு கொள்ளக் கடவுள் மனிதரைப் படைத்தார்.

14. பெரு மகிழ்வில் பங்கு கொள்ளக் கடவுள் மனிதருக்கு அளித்த கொடை என்ன? 
மனிதரைத் தம்முடைய பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தி, தம்மை அப்பா என்று அழைக்கும் உரிமையை அளித்தார். இதுவே கடவுள் மனிதருக்கு அளித்த கொடையாகும். இதை அருள் நிலை என்று அழைக்கிறோம்.

15. மனிதர் இந்நிலையை எவ்வாறு இழந்தனர்? 
அலகையை நம்பி, கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்ததால் மனிதர் அருள் நிலையை இழந்தனர்.

16. முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனையாது? 
1. கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை இழந்தனர்.
2. கடவுள் கொடுத்த அருள் நிலையை இழந்தனர்.
3. பாவ நாட்டம், துன்பம், சாவு முதலிய இன்னல்களுக்கும் நரகத் தண்டனைக்கும் உள்ளாயினர்.

17. பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா? 
இல்லை. மனிதரைப்பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகக் கடவுள் வாக்களித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...