பகுதி: 5
திருஅவை
கடவுள் தம் மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரயேல் என்னும் ஒரு மக்களினத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கிறிஸ்து திரு அவையை ஏற்படுத்தினார்.53. திரு அவை என்றால் என்ன?
இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் வற்ற இறைமக்கள் சமூகமே திரு அவை ஆகும்.
54. திரு அவையை ஏற்படுத்தியவர் யார்?
திரு அவையை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து.
55. திரு அவைக்குத் தலைவர் யார்?
இயேசு கிறிஸ்துவே திரு அவைக்குத் தலைவர்.
56. இயேசு நமக்குப் பின் திரு அவைக்குத் தலைவராக யாரை நியமித்தார்?
திருத்தூதர் பேதுருவை நியமித்தார்.
57. திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்கள் யாவர்?
திருத்தந்தையர்கள்.
58. திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் யாவர்?
ஆயர்கள்.
59. உலகத்தில் திரு அவை ஆற்றும் பணிகள் யாவை?
1. மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்றது.
2. மக்களைப் புனிதப்படுத்துகின்றது.
3. மக்களை இறை வழியில் நடத்துகின்றது.
60. திரு அவையின் உறுப்பினர் என்னும் முறையில் நமக்குள்ள கடமை என்ன?
திரு அவையின் போதனைப்படி வாழ்வதும், அதன் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பதும் நம் கடமை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக