பாவ அறிக்கை (ஒப்புரவு) செய்யும் முறை
1. தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்,
2. தந்தையே, நான் பாவி, என்னை மன்னித்தருளும்.
3. இதுவே, என் முதல் பாவ அறிக்கை
அல்லது
நான் பாவ அறிக்கை செய்து............ மாதங்கள் ஆகின்றன.4. கடந்த பாவ அறிக்கையில் அருள்பணியாளர் கொடுத்த பரிகாரத்தை நிறைவேற்றினேன் / நிறைவேற்றவில்லை.
இப்பொழுது என பாவங்களை அறிக்கையிடுகின்றேன்.
(ஆன்ம சோதனையில் கண்டுபிடித்த பாவங்களை அறிக்கையிடுதல்)
1. இறைவனோடு உள்ள உறவில்
2. பிறரோடு உள்ள உறவில்
3. தன்னோடு உள்ள உறவில்
4.இயற்கையோடு உள்ள உறவில்
5. தந்தையே, நான் இப்பொழுது சொன்ன பாவங்களுக்காகவும், மறந்துபோன பாவங்களுக் காகவும் பாவ மன்னிப்பும், பாவப் பரிகாரமும் கேட்கிறேன்.
(அருள்பணியாளர் தரக்கூடிய அறிவுரையையும், பரிகாரத்தையும் கவனமுடன் கேட்டல்)
6. மனத்துயர் மன்றாட்டு
என் இறைவனாகிய தந்தையே,
நன்மை நிறைந்தவர் நீர்,
அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே.
என் பாவங்களால் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும்,
நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும் மனம் வருந்துகின்றேன்.
உமது அருள் உதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும்,
பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும்
உறுதி கூறுகின்றேன். ஆமென்.
அருள்பணியாளர்: (பாவப் பொறுத்தல் ஆசிர்)
பதில்: (சிலுவை அடையாளம் வரைந்து) “ஆமென்"
அருள்பணியாளர்: இறைவனைப் போற்றுங்கள், ஏனெனில் அவர் நல்லவர்
பதில்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்
அருள்பணியாளர்: இறைவன் உன் பாவங்களை மன்னித்துள்ளார். அமைதி உண்டாகுக.
பதில்: இறைவா உமக்கு நன்றி.
Thanks you father!
பதிலளிநீக்கு