சனி, 25 ஜூலை, 2020

பகுதி:6. திருவிவிலியம்





பகுதி:6. 
திருவிவிலியம்
கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் மனிதருக்குச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் வெளிப்படுத்திய உண்மைகளையும், நிகழ்த்திய வரலாற்றையும் கொண்ட நூல்களின் தொகுப்பே திருவிவிலியம். இது தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்டது.

61. திருவிவிலியம் என்றால் என்ன? 
தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்ட இறைவார்த்தை அடங்கிய நூல்களின் தொகுப்பே திருவிவிலியம் ஆகும்.

62. திருவிவிலியத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை? 
1. பழைய ஏற்பாடு
2. புதிய ஏற்பாடு

63. பழைய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன? 
பழைய ஏற்பாட்டில் மொத்தம் நாற்பத்தாறு நூல்கள் உள்ளன.

64. பழைய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன? 
இஸ்ரயேல் மக்களுக்கும், அவர்கள் வழியாக உலகம் அனைத்திற்கும் கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் வெளிப்படுத்தி, கிறிஸ்துவின் வருகைக்காக மானிடரைத்தயார் செய்த வரலாற்றைப் பழைய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது.

65. புதிய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன? 
புதிய ஏற்பாட்டில் மொத்தம் இருபத்தேழு நூல்கள் உள்ளன.

66. நற்செய்தி நூல்கள் யாவை? 
நற்செய்தி நூல்கள் நான்கு.
1 மத்தேயு எழுதிய நற்செய்தி
2. மாற்கு எழுதிய நற்செய்தி
3. லூக்கா எழுதிய நற்செய்தி
4. யோவான் எழுதிய நற்செய்தி

67. புதிய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன? 
கிறிஸ்துவின் வாழ்வு, மீட்புப் பணி, தொடக்கத் திரு அவையின் வரலாறு. கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் புதிய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...