செபம்: பாஸ்கா கால மூவேளை மன்றாட்டு
(புனித சனியிலிருந்து மூவொரு இறைவன் திருவிழாவரை சொல்ல வேண்டியது)
முன்: விண்ண க அரசியே! மனம் களிகூரும்.
எல்: அல்லேலூயா
முன்: ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறுபெற்றீர்.
எல்: அல்லேலூயா.
முன்: தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்.
எல்: அல்லேலூயா
முன்: எங்களுக்காக இறைவனை மன்றாடும்.
எல்: அல்லேலூயா.
முன்: கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர், அல்லேலூயா
எல்: ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
மன்றாடுவோமாக!
இறைவா! உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் நிலைவாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற அருள் புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக