வெள்ளி, 24 ஜூலை, 2020

"நாம் முதன்மையானவர்கள் அல்ல நாம் பணியாளர்கள்..." (ஜூலை -25. 2020)

 "நாம் முதன்மையானவர்கள் அல்ல நாம் பணியாளர்கள்..." 

"உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்... " என்று இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ..

இன்றைய நற்செய்தியில் தன் மகன்களுக்கு முதன்மையான இடம் வேண்டும் என ஒரு தாய் இயேசுவினிடத்தில் பரிந்து பேசுகிறார். அத்தாயின் செயல் கண்டு உடன் இருந்த சீடர்கள் அனைவரும் அந்த இரண்டு சீடர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். 

சீடர்களின் மனம் அறிந்த இயேசு முதன்மையான இடம், அதிகார நாட்டம் குறித்து சீடர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதே இன்றைய நற்செய்தி பகுதியாக நாம் வாசிக்க கேட்கிறோம் ...


இன்று நாம் வாழக்கூடிய சமூகத்திலும் எப்போதும் நாம் உயர்ந்த முதன்மையான இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணுகிறோம் ... எண்ணுவதில் எந்தவிதமான தவறும் இல்லை ஆனால் அந்த எண்ணமும்,  நோக்கமும் எதற்காக?  என சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம் ...

உயர்ந்த இடம், அதிகாரம் என்பது நம்மைச் சுற்றி இருப்பவர்களால் நமக்கு வழங்கப்படுவது. வழங்கப்படுவதன் நோக்கம் நமக்கு சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக நாம் உழைக்க வேண்டும் என்பதற்காகவே. ஆனால் இன்று இந்த நோக்கமானது மறைந்து உயர்ந்த பதவி, இடம், அதிகாரம் ஆகியவையெல்லாம் மதிப்புக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் எல்லாரிடமும் நாம் தான் உயர்ந்தவர்கள் என கூறி நமக்கு கீழ் அவர்களை அடிமை படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று நிலவக்கூடிய எந்த நிலையை எச்சரிக்கும் நோக்கோடும் முன்பே ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு இந்த அதிகாரம், பட்டம், பதவி, முதன்மையான இடம் இவற்றில் நாட்டம் கொள்ள தேவையில்லை. இவற்றை அடைவதன் நோக்கம் அடுத்தவருக்கு உதவுவதற்காக என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். 

இன்று பதவி, பட்டம், முதன்மையான இடம் இவற்றை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க கூடிய நமது வாழ்க்கையில் இவைகளின் உண்மையான நோக்கம் என்ன? இந்த பொறுப்புகளை அடைவதனால் நாம் செய்ய வேண்டிய பணி என்ன? என்பதை இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கி நாம் வாழும் உலகில் பதவி, பட்டம், முதன்மையான இடம் இவற்றை நாடித் தேடும் நாம்.  "நாம் முதன்மையானவர்கள் அல்ல நாம் பணியாளர்கள்..." என்பதை உணர்ந்தவர்களாக செயல்பட உள்ளத்தில் உறுதி ஏற்று ஆண்டவரின் அடிச்சுவட்டை பின்பற்றியவர்களாய் அவரைப்போலவே அடுத்தவரின் காலடியை கழுவ கூடிய உண்மையான நல்ல பணியாளர்களாக முதன்மைத் தலைவர்களாக வலம்வர முயலுவோம் ....

 "நாம் முதன்மையானவர்கள் அல்ல நாம் பணியாளர்கள்..." 


1 கருத்து:

  1. இறையாட்சியை முதன்முதலில் தேடுங்கள் நாடுங்கள்.மற்றவை அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும் என்ற இறை வார்த்தைக்கேற்ப நாம் இறையாட்சிக்கு முதல் இடம் கொடுப்போம்! இயேசுவுக்காக பணி செய்வோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...