இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த மலைப் பொழிவை குறித்தே இன்று நாம் வாசிக்க கேட்டோம். மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் இந்த மலைப்பொழிவானது நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
ஏழைகளின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் துயரத்தில் இருப்பவர்களுக்கு துணை நிற்பவர்களாகவும் நீதியை நாடி தேடக்கூடியவர்களுமாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
மலைப்பொழிவில் சொல்லப்பட்ட வார்த்தைகளை எல்லாம் வெறும் வார்த்தையாக இயேசு சொல்லவில்லை. சொன்னபடி தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர் இந்த இயேசு. நமக்காக பாடுகள் பட்டு, ரத்தம் சிந்தி, சிலுவையில் தன் இன்னுயிரை தியாகம் செய்தவர். இந்த இயேசுவை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நாம் பயணிக்கின்ற இச்சமுகத்தில் ஒருவர் மற்றவருக்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்து, வாசிக்கப்பட்ட மலைப்பொழிவு வசனங்களை நம் வாழ்வில் செயலாக்கபடுத்துவதற்கான ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக