இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இறைவன் படைத்த இந்த இனிய உலகத்தில் மகிழ்வோடு ஆண்டவருக்கு உகந்தவற்றை செய்கின்ற நபர்களாக நாம் வாழ இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது.
துன்பங்களுக்கு மத்தியிலும் துணிவோடு கடவுளை நாடித் தேடிய தோபித்து சாராவைப் போல, நீங்களும் நானும் கடவுளை நாடித் தேட வேண்டும் என இன்றைய நாளில் இறை வார்த்தையின் வழியாக அழைக்கப்படுகின்றோம்.
ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே வாழ்வில் வருகின்ற இடர்பாடுகளின் போது கடவுளை நாடித் தேடவும், அவரின் உடன் இருப்பை உணரவும், நம்மை காக்க அவர் நம்மோடு இருக்க அனுப்பிய காவல் தூதர்கள் நம்மை வழி நடத்துவார்கள் என்ற ஆழமான நம்பிக்கையில், ஒவ்வொரு நாளும் துன்பத்திற்கு மத்தியிலும் ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக