ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறைவார்த்தையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தந்தையோடு எந்த அளவிற்கு ஒன்றித்திருந்தார் என்பதை உணர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு விடுகிறது. கடவுளோடு அவர் கொண்டிருந்த ஆழமான உறவு அந்த ஒன்றிப்பு அவரை எல்லா துன்பங்களுக்கு மத்தியிலும் இந்த மண்ணில் கடவுளின் பணியை செய்வதற்கான ஆற்றலை கொடுத்தது. நாமும் கடவுளோடு எப்போது இணைந்திருக்கிறோமோ அப்போதெல்லாம் இச்சமூகத்தில் உள்ள அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் எழுந்து நிற்பதற்காகவும், துணிவோடு செயல்படுவதற்கான ஆற்றலையும் பெற்றுக் கொள்வோம் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
இயேசு தன்னுடைய வாழ்வில் சந்தித்த அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தனிமையான இடத்திற்குச் சென்று ஆண்டவரோடு உரையாடி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்தார். இந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நாளும் நேரம் ஒதுக்கி கடவுளோடு உரையாடி அவரோடு உள்ள உறவில் நாளும் நிலைத்திருக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக