ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
துன்பங்கள் வாழ்வில் மேலோங்குகிற போதெல்லாம் வாழ்வே துன்பமயமாக மாறிவிட்டது என்று சொல்லி துவண்டு போய்விடாமல் இருப்பதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்ள இறைவன் அழைப்பு தருகிறார். வாழ்வில் இன்பம் துன்பம் என்ற இரண்டும் வந்து செல்லும். துன்பம் இப்போது உங்களை சூழ்கிறது என்றால், இந்த துன்பம் உங்களை விட்டு மறைந்து உங்கள் வாழ்வு இன்பமயமாக மாறும் என்பதைத் தான் இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் எடுத்துரைக்கிறார். நீங்கள் துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை கண்டு கொள்வீர்கள். மகிழ்வோடு இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்ற வார்த்தைகளை இயேசு குறிப்பிடுவதை நாம் நமது வாழ்வுக்கான வார்த்தைகளாக எடுத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.
பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில், பல நேரங்களில் எதற்கும் நேரமில்லை என்று சொல்லி ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே நம் வாழ்வில் வருகின்ற துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடாமல், இந்த துன்பங்களை கடந்து இறைவன் இன்பத்தை தரவல்லவர் என்பதை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, மகிழ்வோடு ஆண்டவரை நாடிச் செல்லவும், ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சியை உணர்ந்து கொள்ளவும் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக