இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது வாழ்வை குறித்து தந்தையாகி இறைவனோடு உரையாடுவதை குறித்து தான் இன்று நாம் வாசிக்க கேட்கிறோம். கடவுள் தனக்கென வகுத்த திட்டங்கள் அனைத்தையும் உணர்ந்தவராக அந்த திட்டங்களுக்கு செயல் வடிவம் தருகின்ற நபராக இயேசு இந்த மண்ணில் வலம் வந்தார். எத்தனையோ இடர்பாடுகள், நிராகரிப்புகளை வாழ்வில் சந்தித்தபோதும், அத்தனைக்கும் மத்தியிலும் தளரா மனதோடு கடவுளின் பணியை செய்வதில் நிலைத்திருந்தார். தான் இதற்காகத்தான் வந்தேன் என்பதை உணர்ந்து இருந்தார். வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அத்துணை இன்னல்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொண்டார். இறுதிவரை கடவுள்களின் திருவுளத்தை நிறைவேற்றுவது மட்டுமே தன் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவராக, தன் இன்னுயிரையும் நமக்காக தியாகம் செய்து கடவுளின் விருப்பத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார். இந்த இயேசுவைப் போலத்தான் நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்று அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது. எத்தனை துன்ப துயரங்கள் வந்தாலும், அத்துணைக்கு மத்தியிலும் இயேசுவைப் போல கடவுளின் திருவுளத்தை அறிந்து நிறைவேற்றுகின்ற மனிதர்களாக நாம் நமது செயல்களை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக