ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் அன்பு சீடரை குறித்து நாம் வாசிக்க கேட்கிறோம். இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராக, எப்போதும் இயேசுவை விட்டு நீங்காமல் அவரை பின்தொடர்கின்ற ஒரு மனிதராக யோவான் இருந்தார். இந்த யோவானின் மீது பலரும் பொறாமை கொள்ளுகின்ற நபர்களாக இருந்தார்கள். இயேசுவின் இரண்டாம் வருகை வரை இவர் இறக்க மாட்டார் என்ற எண்ணம் கூட அவர்கள் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. அந்த அளவிற்கு இயேசுவின் மீது இந்த யோவான் அதிகமான அன்பு கொண்டிருந்தார்.
இந்த யோவானை போலத்தான் நீங்களும் நானும் நம் வாழ்வில் இயேசுவின் மீதான அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் வழியாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது சொல்லும் செயலும் இந்த இயேசுவின் மீது நாம் அன்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக