ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
அன்னை மரியா எலிசபெத்தை சந்தித்த தினத்தை நினைவு கூர திரு அவை இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறது. கபிரியேல் தூதரின் வார்த்தைகளை கேட்டு வயிற்றில்
இயேசுவை சுமந்து கொண்டிருந்த நிலையில், தன்னைவிட மூத்தவரான எழுசபெத்து கருவுற்று இருக்கிறார்; அதிலும் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது என்பதை உணர்ந்தவராக, தன்னுடைய சேவை அவர்களுக்கு தேவை என்று சொல்லி, அவர்களை தேடிச் சென்று பணி செய்கின்ற ஒரு பெண்ணாக மரியாள் இருப்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். மரியாவின் வாழ்த்தொலியை கேட்டவுடனே, எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை பேருவகையால் துள்ளியது.
மரியாவை எலிசபத்து வாழ்த்த, மரியாவும் கடவுளைப் புகழ்ந்தார். மரியாவிடம் காணப்பட்ட இந்த தாழ்ச்சியும், கடவுளைப் போற்றுகின்ற பண்பும், நமது பண்புகளாக மாறிடவும், நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற நபர்களாகவும் தாழ்ச்சியோடு, கடவுளின் முன்னிலையில் நம்மை தாழ்த்திக் கொண்டு, கடவுளை முன்னிறுத்துகின்ற, முதன்மைப்படுத்துகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக