இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய இறைவார்த்தை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்மை அடிமை நிலையிலிருந்து மீட்டு, உரிமை வாழ்வை நமக்கு வழங்கி இருக்கிறார். அந்த உரிமை வாழ்வில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என இறைவன் நமக்கு வலியுறுத்துவதை நாம் இன்றைய வாசகமாக வாசிக்க கேட்டோம்.
யோனா என்ற இறைவாக்கினரின் நற்செய்தியை கேட்டு மனம் மாறிய மனிதர்களைப் போல, நாமும் அனுதினமும் கேட்கின்ற இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வில் இருக்கின்ற இந்த உலக இச்சைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, அடிமையாக வாழுகின்ற நிலையில் இருந்து கடந்து, கடவுள் தருகின்ற
உரிமை வாழ்வினை உரிமையாக்கிக் கொண்டவர்களாக நாளும் பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக