புதன், 2 நவம்பர், 2022

ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தமாவோம்! (19-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்றைய இறை வார்த்தையானது ஆயத்தமாய் இருப்பதற்கான ஒரு அழைப்பை நமக்கு தருகிறது.  ஆண்டவர் வருகிற போது கடமையை உணர்ந்து செயல்படுகின்ற நல்லதொரு பணியாளர்களாக நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தையானது நமக்கு வலியுறுத்துகிறது. 

ஒரு வீட்டு உரிமையாளர் வந்து பார்க்கிறபோது தன் கடமையை உணர்ந்து செயல்படுகின்ற ஒரு பணியாளரைக் குறித்து எப்படி மகிழ்வாரோ, அதுபோல கடமையை உணர்ந்தவர்களாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே இந்த ஆண்டவரின் வருகையின் போது, அவருக்கு உகந்த மனிதர்களாக வாழ்வதற்கு அவரின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு, அனுதினமும் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தையின் வழியாக இறைவன் நமக்கு எடுத்துரைக்கின்றார். 

இறைவன் எடுத்துரைக்கின்ற இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்ப்போம். நாம் ஆண்டவரின் வருகையை எதிர் நோக்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறோமா?  என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, நம்மை நாம் சரி செய்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

My Portfolio. ( 2025)