செவ்வாய், 1 நவம்பர், 2022

வாழ்வாக்கி வாழ வைப்போம்! (5-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய இறை வார்த்தையானது நாம் நண்பர்களோடு இணைந்து அனுதினமும் ஆண்டவரை நாடிட வேண்டும் என்ற மைய சிந்தனையினை நமக்கு தருகிறது. பவுல் தனது பணியில் பலரை அழைத்துக் கொண்டு சென்றார். பலருக்கு நற்செய்தியை அறிவித்தார். தனக்கு கொடுக்கப்பட்ட பணி பிறை இனத்தாருக்கு நற்செய்தி அறிவிப்பது என்பதை உணர்ந்தவராய், அப்பணியை செய்யக் கூடியவராக, அப்பணியை செய்யக்கூடிய நபர்களை உருவாக்குகின்ற நபராக பவுல் இருந்தார் என்பதை பவுலின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். 

அதுபோலவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இந்த மண்ணில் வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வால் மற்றவருக்கு கற்பித்து தன் சீடர்களுக்கான பயிற்சியையும் அளித்தார்.

                   இன்றைய நாளில் கூட தன் சீடர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை இறைவன் கற்றுக் கொடுக்கக் கூடியவராக இருந்தார். கற்று கொடுத்து விட்டு செல்கிற ஒரு நபராக கடவுள் இருந்து விடவில்லை. தான் எதை கற்பித்தாரோ அதை வாழ்வாக்கினார். 

இன்று நாமும் அனுதினமும் நாம் இருக்கின்ற இடங்களில், செய்கின்ற பணிகளில் பலவற்றை பலருக்கு கற்பிக்கிறோம். கற்பிக்கின்ற நாம், நாம் செய்கின்ற செயல்களில், பொறுப்போடும் கடமையுணர்வோடும் அர்த்தமுள்ள வகையில் செயல்படுகிறோமா என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்தவர்களாய், நாம் நமது பணியை, கடமையை உணர்ந்து, கடவுளை முன்னிறுத்தி செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...