செவ்வாய், 1 நவம்பர், 2022

ஆண்டவரை பற்றிக் கொள்வோம்! (17-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இன்றைய இறை வார்த்தையானது நாம் நிலையற்ற இவ்வுலகத்தில் நிலையானது என்ன நம்பிக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் விட்டுவிட்டு, நிலையான இறைவனை பின்பற்ற வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றது. இந்த நிலையான இறைவனைப் பின்பற்றி அவருக்காகவே தன் வாழ்வை இழந்த ஒருவரை இன்று திரு அவையானது நினைவு கூர அழைப்பு விடுக்கின்றது. 

அவர் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார். தான் வாழ்ந்தபோது, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு மனிதராக இந்த இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி அவரது வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றிக் கொண்டு, தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் இந்த அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார் அவர்கள். இயேசுவை மறுதலித்தால் வாழ்வு என்று சொல்லப்பட்ட போது நான் கோதுமை மணி போன்று மண்ணில் விழுந்து மடிய விரும்புகிறேன்.
 இயேசுவுக்காக உயிரைத் துறப்பதை நான் விரும்புகிறேன் என்று சொல்லி, இறுதிவரை தான் கொண்டிருந்த கடவுள் மீதான பக்தியில் நிலைத்திருந்து இயேசுவை மறுதலிக்காமல், தன் வாழ்வை கடவுளுக்காக இழக்க கூடியவராக மாறியவர்தான் இந்த அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார். இந்த இஞ்ஞாசியாரை நினைவு கூருகின்ற நாம், நாம் கடவுள் மீது கொண்டிருக்கின்ற ஆழமான நம்பிக்கையை குறித்து சிந்திப்பதற்கு அழைக்கப்படுகின்றோம். நாம் இந்த உலகத்தில் கடவுள் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கை வெருமனை வார்த்தை வடிவில் இருக்கிறதா? அல்லது இறைவன் மட்டுமே நிலைவானவர் என்ன நம்பி நமது வாழ்வை நகர்த்துகிறோமா? கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். நிலையானது என எண்ணி நாம் தேடுகின்ற, சேர்த்து வைக்கின்ற அனைத்தும் ஒரு நாள் நம்மை விட்டு மற்றவருடையதாக மாறிப் போகுபோகும். 

ஆனால் நாம் தேடுகின்ற இறைவன் மட்டுமே இறுதி வரை நமது இறைவனாக இருப்பார். இந்த இறைவனின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...