இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசுவின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக் கூடிய நாம், துன்பங்களுக்கு மத்தியிலும் கடவுளுக்கு சான்று பகரக் கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்பட்டிருக்கிறது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக எந்த விதமான துன்பங்களையும் தாங்கிக் கொள்ளுகின்ற மனம் படைத்த மனிதர்களாக நீங்களும் நானும் நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பல நேரங்களில் எதிர்பாராத துன்பங்களை சந்திக்கின்ற போது, மனம் உடைந்து போகக்கூடிய நமக்கு ஆறுதல் தருகின்ற விதத்தில் இன்றைய நாள் இறை வார்த்தை அமைந்திருக்கிறது. நாம் ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழுகிற போது, நம்மை பாதுகாப்பவராகவும், பராமரிப்பவராகவும், உடனிருந்து தேற்றுபவராகவும், கடவுள் இருக்கிறார் என்ற ஆழமான புரிதலை இன்றைய இறை வார்த்தை நமக்கு தருகிறது துன்பங்களுக்கு மத்தியிலும் கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, ஆண்டவரின் நாளில் அவரை எதிர்கொண்டு செல்ல, நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ளக் கூடியவராக, ஆண்டவருக்குச் சான்ற பகருகின்ற மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக