புதன், 2 நவம்பர், 2022

புனித லூக்கா நற்செய்தியாளர் விழா! (18-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இன்று தாய்த்திரு அவையானது புனித லூக்காவை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுகிறது. புனித லூக்கா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு மனிதராக இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பலரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், இயேசுவின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்வதற்காக அனைத்தையும் எழுதி வைத்த ஒரு நபர்.  இவரைக் குறித்து விவிலியத்தில் பல இடங்களில் நாம் வாசிக்க கேட்கலாம். பல விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள், இவர் இயேசுவை சந்தித்தது இல்லை. ஆனால்,  பலர் சொல்வதைக் கேட்டு அதனை எழுதி வைத்திருக்கிறார் என்று. இவர் பவுலோடு இணைந்து பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார் என்பதை விவிலியம் எடுத்துக்காட்டுகிறது. 
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்த ஒவ்வொருவருமே படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியை பறைசாற்ற கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த ஒரு மனிதனாக தனது வாழ்வில் தனது சொல்லாலும் செயலாலும் அதை  வாழ்வாக்கி காண்பித்த ஒரு மனிதனாகவே இந்த லூக்கா அவர்களை இன்றைய நாளில் நாம் நினைவு கூருகின்றோம். இயேசுவின் 72 சீடர்களுள் இவரும் ஒருவராக இருந்திருக்கலாம் என விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.  இந்த லூக்காவை போல இந்த இயேசுவை அறிந்து வைத்திருக்க கூடிய நீங்களும் நானும், இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கும் அவரின் வார்த்தைகளை உள் வாங்கிக் கொண்ட மனிதர்களாக அவரைப்பற்றிய நற்செய்தியை  பலருக்கும் அறிவிக்கும் நல்ல பணியாளர்களாக  இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய நாளில் நமக்குத் தரப்படுகிறது.  

இறைவன் தரும் இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, நமது வாழ்வில் இயேசுவை அறிக்கையிடக் கூடியவர்களாக மாறிட, இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய நபர்களாக இச்சமூகத்தில் அனுதினமும் பயணிக்க ஆண்டவரிடத்தில் அருள் வேண்டலில்  ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...