இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இறை வார்த்தைகள் ஒவ்வொன்றுமே ஆண்டவர் இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம் அவரை எதிர்கொள்வதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பை நமக்கு ஒவ்வொரு நாளும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், இன்றைய இறைவார்த்தையானது தலைவர் வருகிற போது தன் பணியை, தன் கடமையை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கக்கூடிய பணியாளர்களாக நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம்.
ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்பதை எவரும் அறியாது இருக்கின்றபோது, அவரின் வருகையின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக ஒவ்வொரு நாளும் நமது கடமையை உணர்ந்து நமது பணியினை நாம் சரிவரச் செய்ய இறைவார்த்தையின் வழியாக அழைக்கப்படுகின்றோம்.
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு நம் கடமையை நாம் சரிவர செய்கிறபோது, தலைவர் வருகிற போது, ஆண்டவர் இயேசு இரண்டாம் வருகையின் போது அவரை எதிர்கொள்ள தகுதி உள்ளவர்களாக, நமது வாழ்வு அமையும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளையும் பணிகளையும் கடமையை உணர்ந்தவர்களாக, சரிவர செய்யக்கூடிய நபர்களாக நாம் இருப்பதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக