இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது
நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை குறித்து சிந்திப்பதற்கான ஒரு அழைப்பை நமக்கு தருகிறது. நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை ஒன்று தான்.
நம்முள் குடி கொண்டிருப்பவர் தூய ஆவியானவர். இந்த தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்து நமது வாழ்வை இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இன்னும் ஆழமாக, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கான ஒரு அழைப்பை, நமக்கு தருகின்றன.
இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் செதுக்கிக் கொள்ள முயற்சிக்கின்ற போது, என்ன மாதிரியே இருக்கிறது கருத்து வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் செய்து கொள்ளக்கூடிய ஒரு அழைப்பை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இறைவன் நமக்கு தருகின்றார்.
நம்மிடையே இருக்கின்ற பிளவுகளையும், நம்மிடையே இருக்கின்ற கருத்து மோதல்களையும், நாம் சரி செய்து கொண்டு நாம் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கையில் நிலைத்திருக்கக் கூடியவர்களாக ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு , இச்சமூகத்தில் நீங்களும் நானும் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக