இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது, கடவுள் முன்னிலையில் தாழ்ச்சி உள்ள மனிதர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. பல நேரங்களில் பரிசேயரைப் போலவே, நாமும் செய்த நன்மைத் தனங்களை குறித்து சொல்லி பெருமைப்படக் கூடியவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பெருமைப்படுவதற்காக எந்த நல்ல செயலையும் செய்தல் ஆகாது. நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல செயலுமே ஆண்டவர் இயேசு கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்வதன் அடிப்படையாக அமைய வேண்டும். பல நேரங்களில் நாம் பெருமையை தேடுகின்ற மனிதர்களாக பல மனிதர்களுக்கு முன்னிலையில், நம்மை குறித்தும், நமது செயல்களை குறித்தும், இன்னும் அதிகமாக தம்பட்டம் அடிக்கின்ற நபர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். கடவுள் இத்தகைய செயல் தவறு என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக சுட்டி காண்பிக்கின்றார்.
நாம் பவுல் அடியாரை போல, நமது வாழ்வில் எல்லாவிதமான நன்மைகளையும் சக மனிதர்களுக்கு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்த நன்மைகளை செய்வதனால், நமக்கு என்ன கைமாறு கிடைக்கும் என்ற எதிர் நோக்கோடு எதையும் செய்யாமல், கடவுளுக்காக நாம் செய்கிறோம், நாம் செய்கின்ற ஒவ்வொன்றுமே கடவுளின் வார்த்தையை வாழ்வாக்குவதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நாம் வாழுகின்ற இச் சமூகத்தில் காணுகின்ற ஒவ்வொரு நபரையுமே கடவுளின் சாயல் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, நம்மால் இயன்ற நன்மைகளை மற்றவருக்கு செய்து கொண்டே செல்வதற்கான ஆற்றலை பெற்றுக் கொள்ள இன்றைய நாளில் இறை வார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
பவுலடியார் தன் வாழ்வில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பலருக்கும் அறிவித்தார். இந்த நற்செய்தி அறிவிப்புக்காக தனக்கு கைமாறு வேண்டுமென அவர் விரும்பவில்லை. மாறாக தான் செய்த நற்செய்தியின் அடிப்படையில், கடவுளை போற்றி புகழக்கூடிய நபராக, பவன் இருந்தார் என்பதை பவுலின் வாழ்வில் இருந்து வருகிறோம். இந்த பவுலைப் போலவே நீங்களும் நானும் நமது வாழ்வில் நாம் காணுகின்ற மனிதர்களுக்கிடையே கடவுளுடைய வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்களாக, நன்மைகளை செய்து கொண்டே செல்லக்கூடிய நபர்களாக, இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.
இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நாம் காணுகிற ஒவ்வொரு மனிதருக்கும் நன்மைகளை செய்து கொண்டே செல்வோம். செய்கிற நன்மைகளை குறித்து பெருமை பாராட்டுவதை விட்டுவிட்டு, நாம் செய்கிற அனைத்துமே கடவுளுக்காக; நாம் செய்கின்ற ஒவ்வொருவருமே
கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குவதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்தவர்களாக வாழ இன்றைய நாளில்
இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக