செவ்வாய், 1 நவம்பர், 2022

நற்செய்தியின் பாதையில் நமது நம்பிக்கை தொடரட்டும்! (6-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகமானது, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியால் கவரப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், நான் கேட்ட நற்செய்தியில் நிலைத்திருக்கவும் அழைப்பு தரப்படுகிறது. நாம் பல நேரங்களில் நற்செய்தியில் பலவற்றை கேட்டிருந்தாலும், நமது வாழ்வில் இந்த உலகின் போக்கின்படி அமைத்துக் கொள்கிறோம் ‌. ஆனால் கடவுளை நம்பி இருக்கிற நம் ஒவ்வொருவரையும் கடவுள் கரம் பிடித்து வழிநடத்துவார் என்று ஆழமான நம்பிக்கையோடு, அனுதினமும் பயணிக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தையானது நமக்கு வலியுறுத்தி கூறுகிறது. மனிதர்களாகிய நாம், சக மனிதர்களுக்கு நன்மையினை செய்ய வேண்டும் என எண்ணுகிற போது, நம்மை படைத்த இறைவன் நமது வாழ்வில் எப்போதும் நன்மைகளை மட்டுமே செய்ய  வல்லவர். நமது வாழ்வில் வருகின்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் கடவுளின் கட்டளை எது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, கடவுளின் திட்டத்திற்கு செவி கொடுத்தவர்களாக, ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக, நாளும் நற்செய்தியின் பாதையில் நமது வழியை அமைத்துக் கொள்ள இறையருள் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

My Portfolio. ( 2025)