இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நீங்களும் நானும் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தையானது நமக்கு எடுத்துரைக்கிறது.
சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்கின்ற இறைவன் நமக்குத் தேவையானவற்றை தேவையான நேரத்தில் தர வல்லவர் என்பதை உணர்ந்து கொண்ட மனிதர்களாக நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக, நம்மால் இயன்ற நன்மைகளை ஒருவர் மற்றவருக்கு செய்யக்கூடிய நபர்களாக, தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்து, இந்த சமூகத்தில் நமது வாழ்வை நாளும் நெறிப்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான அழைப்பை இறைவன் இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நமக்கு தருகின்றார்.
இந்த இறைவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் செய்கின்ற அனைத்தையும் எவரும் அறிய மாட்டார் என்று எண்ணாமல், அனைத்தையும் ஆண்டவர் அறிய வல்லவர் என்பதை மனதில் இருத்தியவர்களாய் நம்மை படைத்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக, நாளும் அவரது பாதையில் நமது பயணத்தை அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக