இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையானது புனித குழந்தை தெரசம்மாளின் திருவிழாவினை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது. புனித குழந்தை தெரசம்மாள் மண்ணில் வாழ்ந்த 24 ஆண்டுகளில் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ்ந்தார். தன் வாழ்வில் சின்னஞ்சிறிய காரியங்கள் மூலமாக கடவுளுக்கு ஏற்புடையவராக வாழ நமக்கு முன்மாதிரியாக இருந்தவர், நம்மையும் அந்த முன்மாதிரிகையைப் பின்பற்றி வாழ அழைப்பு விடுப்பவர்.
செய்கின்ற சின்னஞ்சிறிய செயல்களை கூட ஆன்மாக்களின் மீட்புக்காக செய்தவரைத் தான் இன்று நாம் நினைவு கூருகிறோம். இந்த குழந்தை தெரசாவின் சிறிய வழியை பின்பற்றிக் கொண்டவர்களாக நாமும் நமது வாழ்வில் ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக, தாழ்ச்சி உள்ளவர்களாக, கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாக, நாம் நாளும் வளர்வதற்கான ஒரு அழைப்பை இன்றைய வாசங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகிறார்.
இறைவன் தருகின்ற இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, புனித குழந்தை தெரசாவைப் போல தாழ்ச்சியோடு சின்னஞ்சிறிய காரியங்கள் வழியாக கடவுளுக்கு உகந்தவற்றை
நாம் செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக