இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாள் இறை வார்த்தையானது நாம் நம்பிக்கையோடு தொடர்ந்து செபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இஸ்ராயேல் மக்களுக்காக மோசே கைகளை உயர்த்தி செபித்த போதெல்லாம், இஸ்ரேல் மக்கள் போரில் வெற்றி கொண்டார்கள் என முதல் வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கின்றோம்.
சிறு வயது முதலே நாம் கேட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்ற நாம் அவரிடத்தில் நம்பிக்கையோடு தொடர்ந்து நமது வேண்டுதல்களை முன்னெடுக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். பல நேரங்களில் நமது வேண்டுதல்களுக்கு கடவுள் காலம் தாழ்த்துவது போல தோன்றினாலும், நமது விடாமுயற்சியின் காரணமாக கடவுள் தகுந்த நேரத்தில் நமது மன்றாட்டுகளுக்கு பதில் தருவார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து செபிப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக