ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்து ஆவலோடு சிந்தித்துக் கொண்டிருக்க கூடிய இந்த நாட்களில், நாம் நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு வழங்குகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையோடு வந்த ஒரு பார்வையற்ற மனிதன் இயேசுவினிடத்தில் பார்வை பெற்று செல்வதை நாம் வாசிக்க கேட்கின்றோம்.
நம்பிக்கையோடு ஆண்டவரின் நாள் வரும்வரை நாம் காத்திருக்கவும், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
நம்பிக்கையில் நிலைத்திருந்து ஆண்டவரை எதிர்கொள்ள ஆற்றல் வேண்டி
இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக