இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையானது புனித பேதுரு பவுலுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பேராலயங்களை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு தருகிறது. பல்வேறு தியாகங்களை செய்து ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை பலருக்கும் அறிவித்த இந்த இரண்டு திருத்தூதர்களுடைய கல்லறையிலும் ஆலயம் எழுப்பப்பட்டது. அந்த ஆலயம் கட்டி எழுப்ப உதவிய ஒவ்வொருவரையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூருவதற்கு திருஅவை இன்று அழைப்பு விடுக்கிறது. இந்த ஆலயங்களை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில், நாம் இருக்கின்ற, நமது பகுதியில் இருக்கின்ற ஆலயங்களை எல்லாம் கட்டி எழுப்புவதற்காக தங்களது உடல் பொருள் ஆவியை கொடுத்த, அத்தனை நல்ல உள்ளங்களையும் நன்றியோடு நினைக்கவும், இறை வேண்டலின் வீடாகிய இந்த இறைவனின் இல்லத்தை பயன்படுத்தி இறைவனோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்கவும் இன்றைய நாளில் இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.
இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், அழகுற கட்டி இருக்கின்ற ஆலயத்தின் அழகை கண்டு ரசிப்பதை விட, அதில் இருக்கின்ற ஆண்டவரோடு அமர்ந்து உரையாடுவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக